உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
சிவகங்கை
சிவகங்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேளதாளங்கள் முழங்க காவல்துறை கொடி அணிவகுப்பு நடந்தது.
தமிழகம் முழுவதும் வருகிற 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சிவகங்கை நகராட்சி பகுதியில் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் போலீசாரின் கொடி அணிவகுப்பை தொடங்கிவைத்தார்.
மேளதாளங்கள் முழங்க அரண்மனை வாயில் முன்பு தொடங்கிய அணிவகுப்பு மதுரை முக்கு, காந்தி வீதி, நேரு பஜார் வழியாக பஸ் நிலையம் வந்தடைந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த கொடி அணிவகுப்பில் ஆண், பெண் காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் என சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.