உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு கடன்சங்க நிர்வாகக் குழு கூட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூட்டுறவு சங்க தலைவர் ஜெ.ஆர். அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். இதில் விவசாய கடன் மற்றும் நகை கடன் உள்ளிட்ட பல்வேறு வரவு செலவு பணிகளுக்காக விவசாயிகள் நீண்ட தூரம் கடந்து விராலிமலை வர வேண்டிய நிலைஉள்ளது.
எனவே விவசாயிகளின் கால விரயத்தை போக்க விராலிமலையில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாக பிரித்து, கல்குடியில் புதிதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் தொடங்க வேண்டும்,
அதோடு பூதகுடி, கோமங்கலம் ஊராட்சியை கல்குடியில் இணைக்க வேண்டும், விராலிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பணிச்சுமையை குறைக்க மேலும் ஒரு உதவியாளர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் துணை தலைவர் குமரேசன், இயக்குநர்கள் மணிமாலா செந்தில், வேலுமணி உள்பட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.