உள்ளூர் செய்திகள்
திமுக - பாமக

விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில் ஒரே பெயரில் திமுக - பாமக வேட்பாளர்கள்

Published On 2022-02-09 19:31 IST   |   Update On 2022-02-09 19:31:00 IST
விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில் தி.மு.க., பா.ம.க., வேட்பாளர்கள் இருவருக்கும் தளபதி என்று பெயர் உள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில், தி.மு.க., வேட்பாளர் வே. தளபதி, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் சேர்மன் அருள் அழகன், பா.ம.க., வேட்பாளராக கா. தளபதி, பா.ஜனதா வேட்பாளர் ஜெயராமன் போட்டியிடுகின்றனர்.

இதில் தி.மு.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள், இருவரும் தளபதி என்ற ஒரே பெயரை கொண்டவர்கள். தேர்தல்களில் ஒரே பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர்கள் பலர் களமிறங்குவர். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை தடுத்துவிட முடியும் என்பது பரவலான கருத்து.

விருத்தாசலம் நகராட்சி 7-வது வார்டில் தி.மு.க., பா.ம.க., வேட்பாளர்கள் இருவருக்கும் தளபதி என்று பெயர் உள்ளது. இதனால் சின்னங்களை வைத்து ஓட்டுபோட வேண்டும் என ஆதரவாளர்கள் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுக்கின்றனர். அதன்படி, சூரியன் தளபதி, மாம்பழ தளபதி என வாக்காளர்களிடம் வித்தியாசமாக கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். 

Similar News