உள்ளூர் செய்திகள்
சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்ற போது எடுத்த படம்.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

Published On 2022-02-08 16:57 IST   |   Update On 2022-02-08 16:57:00 IST
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ரத சப்தமியை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலில் தேரோட்டம், சாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவில் உட்புறத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் முகூர்த்த நாட்களில் திருமணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று ரதசப்தமியை முன்னிட்டு தேவநாத சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Similar News