உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் தேர்தல் களம் காணும் 902 பேர்
புதுக்கோட்டையில் 902 பேர் தேர்தல் களம் காணுகிறார்கள்
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் 19&ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 189 வார்டுகளுக்கு 1,114 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
அதில் மொத்தம் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், நகராட்சிகளில் புதுக்கோட்டையில் 47, அறந்தாங்கியில் 17, பேரூராட் சிகளில் ஆலங்குடியில் 16, அன்னவாசலில் 7, அரிமளத்தில் 15, இலுப்பூரில் 33, கறம்பக்குடியில் 9, கீரமங்கலத்தில் 20,
கீரனூரில் 10 மற்றும் பொன்னமராவதியில் 17 என மொத்தம் 191 வேட்பு மனுக்கள் நேற்று வாபஸ் பெறப்பட்டன. 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மாவட்டத்தில் 187 வார்டுகளில் 902 பேர் களத்தில் உள்ளனர்.