உள்ளூர் செய்திகள்
கைது

காரைக்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது

Published On 2022-02-07 12:07 IST   |   Update On 2022-02-07 12:07:00 IST
தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

இவரது தந்தை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அந்த மாணவி காரைக்குடியில் தனது தாய் மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக காரைக்குடியில் மாணவி தனது வீட்டில் சில மாதங்களாக தங்கியிருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது தாயாருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனது தாயாரை அருகில் உள்ள தனியார் கிளீனிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் மோகன்குமார் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.

அப்போது டாக்டர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் அந்த மாணவி தவித்து வந்தார்.

இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். அப்போது டாக்டரின் அத்துமீறல் குறித்து மகள் தனது தந்தையுடன் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் டாக்டர் மோகன்குமார் மீது காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தனர்.

தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News