உள்ளூர் செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் பகுதியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அடுத்த எப்போதும்வென்றான் அருகே உள்ள சிவஞானபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 41), பாலமுருகன் (37), முத்து (38) ஆகியோரை கைது செய்து மினிலாரி மற்றும் ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.