உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் நகராட்சி

194 மனுக்கள் ஏற்பு-3 மனுக்கள் நிராகரிப்பு

Published On 2022-02-06 14:17 IST   |   Update On 2022-02-06 14:17:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 194 மனுக்கள் ஏற்கப்பட்டு, 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 197 பேர்மனு தாக்கல் செய்திருந்தனர். 

மனுக்கள் பரிசீலனை நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நகராட்சி 7வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரபாண்டியன், 10-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளர் சுப.நாகராஜன் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செயப்பட்டன.

திங்கட்கிழமை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சியில் ஆணையர் அறையில் மட்டும் மனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், பிரச்சினைக்கு பிறகு 4 அறைகளில் மனு பரிசீலனை நடைபெற்றது.

நகராட்சியில் பெறப்பட்ட மொத்தம் 197 மனுக்களில் 3 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து 194 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று நகராட்சி ஆணையாளர் சந்திரா தெரிவித்தார்.

Similar News