உள்ளூர் செய்திகள்
கோவிந்தசாமி

அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடிக்கு தி.மு.க தான் காரணம் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி பேட்டி

Published On 2022-02-06 13:37 IST   |   Update On 2022-02-06 13:37:00 IST
அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடிக்கு தி.மு.க.வினரே காரணம் என்று பாப்பி ரெட்டிப்பட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி கூறியுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் டவுன் பஞ்சாயத்திலுள்ள 15 வார்டுகளில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 76 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 

அதன் மீதான பரிசீலனை டவுன் பஞ்சாயத்தில் நேற்று நடந்தது. இதில் 6-வது வார்டு முள்ளிக்காட்டில், அ.தி.மு.க. சார்பில் மூக்கன் என்பவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் அவரது கையொப்பம் இல்லை என் அவரது மனு தள்ளு படியானது. 

இதுகுறித்து பாப்பி ரெட்டிப்பட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தசாமி கூறுகையில், 

கடத்தூர் 6-வது வார்டு, அ.தி.மு.க. வேட்பாளர் மூக்கனின் வேட்புமனுவை மாற்றி விட்டு அதில் வேட்பாளர் கையெழுத்து இல்லை என தி.மு.க.வுக்கு துணை போகும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

இது தி.மு.க.வின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது. தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் இது போன்று குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளது. இதற்கு நீதிமன்றத்தை அணுகி வழக்குகள் தொடுப்போம் என்றார். 

இதேபோன்று 2-வது வார்டு, அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தா தி.மு.க. வேட்பாளர் மீனலோஷனி ஆகியோரது வயது சான்றிதழ் இணைக்காதது, 7-வது வார்டு, தே.மு.தி.க., வேட்பாளர் தென்றல், பிரியா என ஐந்து பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Similar News