உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சோதனைக்கு அனுப்பி வைப்பு
திட்டக்குடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மாதிரி சேகரித்து கோவை ஆய்வு கூடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டியில் இப்ராஹிம் (47) இவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இதனை அறிந்த குற்ற தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில் 25 டன் புகையிலை பறிமுதல் செய்தனர்.
நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு 25 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை மாதிரி சேகரித்து கோவை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.