உள்ளூர் செய்திகள்
தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-02-05 15:14 IST   |   Update On 2022-02-05 15:14:00 IST
காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் நெம்புனேஸ்வரம் சேர்ந்தவர் வீரப்பன் (வயது32-). இவரும்  அதே பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 21) என்பவரும் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதல் ஜோடிகள் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு கேட்டு  ஆலங்குடி காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

இச்சம்பவம்  தொடர்பாக ஆலங்குடி காவல் இன்ஸ்பெக்டர் அழகம்மை  இருதரப்பு குடும்பத்தினரை அழைத்து சமரச பேச்சில் ஈடுபட்டார்.

ஆனால் இருதரப்பிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.  காதலர்கள் இருவருக்கும் திருமண வயதை எட்டியதால் இருவரையும் இணைத்து வைப்பதாக இன்ஸ்பெக்டர் அழகம்மை அவர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் காதலர்கள் இருவரையும் போலீஸ் காவல் இன்ஸ்பெக்டர் அழகம்மை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Similar News