உள்ளூர் செய்திகள்
மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா வாக்கு மையங்களில் ஆய்வு செய்த காட்சி.

வாக்கு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

Published On 2022-02-05 14:46 IST   |   Update On 2022-02-05 14:46:00 IST
வாக்கு மையங்களில் அடிப்படை வசதிகள் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
புதுக்கோட்டை:
 
புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துதல் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்,  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா, அரிமளம் பேரூராட்சியில் பறக்கும்படையினர் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்,
 
அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு விண்ணப்பப் படிவங்கள், அதற்கான பதிவேட்டினையும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், அரிமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அறைகள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும், அடிப்படை வசதிகள் வாக்கா ளர்களுக்கு தவறாமல் செய்யப்பட வேண்டும்  என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பிரவினாமேரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News