உள்ளூர் செய்திகள்
பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் வட்டார போக்குவரத்து அதிகாரி முன்னிலையில் அகற்றப்பட்டது.

பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

Published On 2022-02-04 16:37 IST   |   Update On 2022-02-04 16:37:00 IST
சிவகங்கையில் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை

சிவகங்கையில் இயக்கப்படும் பஸ்களில் அதிக ஒலி எழுப்பி ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கையாவிற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து இன்று அவரது தலைமையிலான குழுவினர் சிவகங்கை பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தனர். இதில் பல தனியார் பஸ்கள் மற்றும் அரசு பஸ்ககளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனடியாக அவற்றை  அப்புறப்படுத்தி பறிமுதல் செய்தனர். டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு இது போன்ற ஏர்ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தனர். 

வட்டார போக்குவரத்து அலுவலர் திடீரென்று ஆய்வு செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தது அந்தப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News