உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவிழா போல் காட்சியளிக்கும் நகராட்சி அலுவலகம்

Published On 2022-02-03 12:04 IST   |   Update On 2022-02-03 12:04:00 IST
நாளை மனு தாக்கல் செய்ய இறுதிநாள் என்பதால் நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டம் கூட்டமாக வேட்பாளர்கள் குவிகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகரா ட்சிக்கும், ஆலங்குடி, அன்ன வாசல், அரிமளம், இலுப்பூர், கறம்பகுடி, கீரனூர் மற் றும் கீரமங்கலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 189 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளுக்கு நேற்று வரை 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சிகளில் உள்ள 120 இடங்களுக்கு 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணி முடிவாகி வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் அ.தி.மு.க. வினர் மற்றும் தனியாக போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் என பலர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்யகூடும். வேட்பு மனு நாளையுடன் முடிவடைகிறது.

இதனால் தற்போது நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலங்கள் திருவிழா நடைபெறும் இடங்கள் போல் காட்சியளிக்கிறது. வேட்பாளர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகமாக களம் காண்கின்றனர். மேலும் நகராட்சி வார்டுகளின் எல்லைகளை மாற்றி அமைத்துள்ளாதால் தற்போது வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை வார்டுகளில் மாறுபட்டுள்ளது.

சிறிய வார்டாக இருந்த வார்டுகள் அதிக வாக்காளர்களை கொண்டு பெரிய வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது இருப்பினும் முன்பு போல் மக்களிடையே தேர்தல் நடவடிக்கை இல்லை என கூறலாம்.

பிரச்சாரத்திற்கு மேளம், தாளம், நடனம் என பலவகைகளில் வேட்பாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அமைதியாக சென்று வாக்குகள் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள அதிக நாட்கள் இல்லை. சின்னத்துடன் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபின் பிரச்சாரத்தில் சூடு பறக்கும் என்றால் மிகையல்ல.

Similar News