உள்ளூர் செய்திகள்
அரிய வகை கடல்வாழ் பச்சையாமையினை வனத்துறையினர் மீண்டும் கடலில் விட்ட காட்சி.

மீனவர் வலையில் சிக்கிய அரியவை கடல் வாழ் பச்சையாமை

Published On 2022-02-02 12:11 IST   |   Update On 2022-02-02 12:11:00 IST
மீனவர் வலையில் சிக்கிய அரியவை கடல் வாழ் பச்சையாமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை  மாவட்டம் மணமேல்குடி தாலுகா தெற்கு புதுக்குடியிருப்பு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்.  மீனவரான  இவர் தனக்கு சொந்தமான படகில்   கடலில்   மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்தபோது மீன்பிடி வலையில்    அரிய வகை  கடல்  வாழ் உயிரினமான பச்சையாமை  ஒன்று சிக்கியிருந்தது.

இதுபற்றி மாதவன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் ஆகியோரின் உத்தரவுப்படி வனசரக அலுவலர் சதாசிவம் மணமேல்குடி பிரிவு ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி, தற்காலிக பாதுகாப்பு காவலர்  முத்துராமன்  ஆகியோர்  வலையில்   சிக்கிய அரியவகை பச்சை ஆமையினை மீட்டு பாதுகாப்பாக மீனவர்கள் செல்வமணி, மாரியப்பன் ஆகியோர் உதவியுடன் கடலில் விட்டனர்.

பாதுகாப்பாக விடப்பட்ட பச்சையாமனை நீர் நிலையில் நீந்தி தனது வாழ்வை நோக்கி சென்றதை அனைவரும் உறுதி செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில்  இருந்த  போதிலும் இந்த  பகுதிக்கு  வந்தது   இதுவே முதல் முறையாகும்.

வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பச்சையாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினம் ஆகும். அதனை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்பு  சட்டம்  1988 பிரிவு  51-ன்படி  மூன்று வருடத்திற்கு குறையாமல் 7 வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயி ரத்துக்கும் குறையாத அபராதமும் விதிக்கவும் வழி வகை உள்ளது.

எனவே கடல் பசு, கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை, சித்தாமை, பச்சை யாமை, டால்பின், திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பணத்தை வைத்து முழு  ஒத்துழைப்பு  வழங்க கோரி வனத்துறையினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Similar News