உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அறந்தாங்கியில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை சந்திக்க வந்த இந்து முன்னணி தலைவருக்கு அனுமதி மறுப்பு

Published On 2022-02-01 12:15 IST   |   Update On 2022-02-01 12:15:00 IST
ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை சந்திக்க வந்த இந்து முன்னணி தலைவருக்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே திம்மியம்பட்டியில் மதம் மாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 2 கிறிஸ்தவ பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கணேஷ்பாபு கைது செய்யப்பட்டார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து வரும் அவர் அறந்தாங்கிகிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கணேஷ் பாபுவை சந்திக்க வந்த, இந்து முன்னணி மாநிலதலைவர் காடேஸ்வர சுப்பிரமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது குறித்து காடேஸ்வர சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில், திம்மியம்பட்டி பகுதியில் இந்து மக்களை, கிறிஸ்தவத்திற்கு   மதம் மாற்ற, இரண்டு பெண்கள் முயற்சித்து  வந்துள்ளனர். இதனை  தட்டிக்  கேட்ட ஆர்.எஸ்.எஸ்.ன்  மாவட்ட மக்கள் தொடர்பு அலுவர் கணேஷ் பாபுவை  காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்,

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் மதம் மாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்க்கொள்ளாமல், அதனை தட்டி கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வேதனைக்குறியது என்றார். தொடர்ந்து பேசிய அவர் அறந்தாங்கி கிளை சிறையில் உள்ள கணேஷ்பாபுவை சந்திக்க  வந்தோம்.  

ஆனால் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தமிழக அரசு கிறிஸ்துவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.எனவே தமிழக அரசு உடனடியாக சிறையில்  உள்ள கணேஷ் பாபுவை விடுவித்து, மதம் மாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பா.ஜ.க. நிர்வாகிகள்,  இந்து முன்னணி அமைப்பின்  நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை நீதிமன்ற உத்தரவுப்படி கணேஷ்பாபு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News