உள்ளூர் செய்திகள்
அரிவாள், கோடாரி தயார் செய்யும் காட்சி.

அறந்தாங்கியில் அரிவாள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் வடமாநிலத்தினர்

Published On 2022-01-31 12:39 IST   |   Update On 2022-01-31 12:39:00 IST
அரிவாள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் வடமாநிலத்தினர்.

புதுக்கோட்டை:

உத்திரப்பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த கொல்லுப்பட்டறைத் தொழிலாளர்கள் பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தொழில் செய்து வருகின்றனர்.

குறிப்பாக  இவர்கள் அரிவாள்,  கோடாரி,  கடப்பாரை, மண்வெட்டி, களை வெட்டி,  சுத்தியல்,  உளி போன்றவைகளை தயாரித்து பொதுமக்கள் மத்தியில் அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
 
தங்கள் மாநிலத்தில் போதிய  வரவேற்பு  கிடைக்கா ததையடுத்து,  தமிழகம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வந்த  கொல்லுப்பட்டறைத் தொழிலாளர்கள் 50&க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் முகாமிட்டுள்ளனர். 

மேலும் வசிப்பதற்கென்று ஒரு இடத்தை தேர்வு செய்யாமல், பொது மக்கள் அதிகம் கூடுகின்ற சாலையோர பகுதிகளில்  கொட்டகை அமைத்து  அரிவாள்  உள்ளிட்ட பொருட்களை செய்து குறைந்த  விலைக்குவிற்பனை செய்து வருகின்றனர். 

அதோடு  மட்டுமல்லாது பொதுமக்கள்  கேட்கின்ற வடிவத்தில், எடையில் உடனே செய்து   கொடுப்பதால், பொது மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பொருட்களை தயார் செய்யக்கூறி ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Similar News