உள்ளூர் செய்திகள்
விடுமுறை நாளில் செயல்பட்ட 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை நாளில் செயல்பட்ட 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படியும், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கான படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கான படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்£ன படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணிநேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அலு வலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று மற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின்போது சட்ட விதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 47 நிறுவனங்களில் முரண் பாடுகள் கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.