உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சட்ட விரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது - 440 கிராம் பறிமுதல்

Published On 2022-01-28 07:03 GMT   |   Update On 2022-01-28 07:03 GMT
சட்ட விரோதமாக கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதிகளில், திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்பவர்க ளிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 60  வயது மதிக்கத்தக்க பெண் வியாபாரி தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சிறப்பு சப்& இன்ஸ்பெக்டர் தமிழரசன் கவிநாடு கண்மாய் பகுதியில் சோதனை செய்ததில் சட்ட விரோதமாக கஞ்சா விற் பனை செய்த திருக்கோகர்ணம் ரெட்டை குளத்தை சேர்ந்த ஜேம்ஸ் மாத்யூ மகன் விவேக் மாத்யூ (26) என்பவரை கைது செய்தார்.  அதே போல் சப்&இன்ஸ் பெக்டர்  சமுத்திரராஜன் பெருமாள்பட்டி  மயானம் அருகே கஞ்சா விற்பனை செய்த சன்னதி தெருவை சேர்ந்த கருப்பையா மகன் ராஜசேகரை (22) கைது செய்தார். 

மேலும் சப்&இன்ஸ்பெக் டர் சரவணன் ஆலங்குளம் ஹசிங்யூனிட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரெட்டை குளத்தை சேர்ந்த பக்கிரிமஸ்தான் மகன் சதாம் உசேன் (19) என்பவரை கைது செய்தார். இவர்களிடமிருந்து 440 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத் தில் தொடர்ச்சியாக ஆன் லைன்  லாட்டரி  மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தடுக்கப்பட்டு அதில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார்  கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் சரகத்திற்குட்பட்ட அரசர் குளம் கடைவீதியில் கீரமங்கலம் காமராஜ் தெருவை சேர்ந்த நாகமுத்து மகன் சிவஞானம் (45), அறந்தாங்கி அருகே அரசர் குளம் கீழ் பாதியை சேர்ந்த சிவசாமி மகன் அருள் (45) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பில் புக் ஒன்றும், ரொக்கம் 7,250 யும் பறிமுதல் செய்தனர். 

இதேபோல் சுப்பிரமணியபுரம் கடைவீதியில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் சண்முகம் சோதனை மேற்கொண்டதில் கொடிவயல் கிழக்கு பகுதியை சேர்ந்த முத்து (69) என்வரை கைது செய்து அவரிடமிருந்து ரொக்கம் 2,980, ஒரு பில் புக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News