உள்ளூர் செய்திகள்
அரையப்பட்டியல் பாதம் பணிந்து வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

குடியரசு தின விழாவில் மருத்துவர்கள் பாதம் பணிந்து வணங்கும் நிகழ்வு

Published On 2022-01-27 10:04 GMT   |   Update On 2022-01-27 10:04 GMT
ஆலங்குடி அருகே குடியரசு தின விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களின் பாதம் பணிந்து வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுக்கோட்டை:

குடியரசு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் பாரத தேசத்தின் சார்பாக பாதம் தொட்டு வணங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில், அன்பானந்தம் ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் மற்றும் முன்னாள் விவசாய அணியை சேர்ந்த கதிர்வேல் ஏற்பாட்டில் அரையப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் துரை மலர்விழி மற்றும் துணைத்தலைவர் விஜயா சின்னத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பா.ஜ.க. ஒன்றிய பொதுச் செயலாளர்கள் பிரபாகரன், கோபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீர்த்தவேல், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் மாத்தூர் மணி, அறந்தை வடக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்களின் மகத்தான சேவையை நினைவுகூர்ந்து பாத பூஜை செய்து பிரதமரின் கையொப்பமிட்ட நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொரொனா பரவ தொடங்கியது முதல் இன்று வரை கொரொனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்து குடும்பத்தை மறந்து சுற்றத்தாரை துறந்து தாங்கள் இந்த தன்னலமற்ற சேவை தான் மக்களை காப்பாற்றியது, இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று வாழ்த்துரை வழங்கினர்.
Tags:    

Similar News