உள்ளூர் செய்திகள்
சாலையில் தவற விட்ட நகையை ஒரு மணி நேரத்தில் ஒப்படைத்த போலீசார்
காரைக்குடியில் சாலையில் தவற விட்ட நகையை ஒரு மணி நேரத்தில் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
காரைக்குடி
தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயலைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவரது மனைவி விசாலாட்சி.இவர் தனது வைரம் மற்றும் தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதற்காக தாயாருடன் இருசக்கர வாகனத்தில் காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
வங்கிக்கு சென்று பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம், செல்போன் வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் பெரியார் சிலை அருகே கீழே விழுந்த கைப்பையை மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.ஒரு மணி நேரத்தில் அவரிடம் இருந்து கைப்பையை கைப்பற்றி போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் நகை பையை விசாலாட்சியிடம் ஒப்படைத்தனர்.