உள்ளூர் செய்திகள்
வாடகைக்கு வீடு கிடைக்காததால் பெண் தீக்குளித்து தற்கொலை
வேலூர் அருகே வாடகைக்கு வீடு கிடைக்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள். அவர் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் கவுண்டன்ய மகாநதி ஆற்றின்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட உள்ளதால் ஏராளமானோர் தங்கள் வீடுகளை காலி செய்து வேறு இடத்தில் வாடகைக்கு குடியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் எங்கும் வீடு கிடைக்காததால் விரக்தி அடைந்த பவுனம்மாள் வியாழக்கிழமை இரவு தனது வீட்டருகே தெருவில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பவுனம்மாள் இறந்து விட்டார்.