உள்ளூர் செய்திகள்
தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த கார்த்திகேயன் (வயது59) உள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களாக சளி, இருமலுடன் லேசான காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
அவர் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.