உள்ளூர் செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் திடீர் போராட்டம்

Published On 2022-01-10 06:44 GMT   |   Update On 2022-01-10 06:44 GMT
கொரோனா காலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஆஸ்பத்திரியில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாதம் சம்பளம் நிலுவை ஆகியவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக பயிற்சி டாக்டர்கள் சம்பளம் கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

எங்களுக்கு மாதந்தோறும் ரூ 25,000 பயிற்சி ஊதியமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் இந்த ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்துக்கு பதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். அதேபோல ஜூலை மாத சம்பளம் அரியர் பணமும் குறைந்த அளவே வழங்கியுள்ளனர்.

மற்ற மருத்துவ கல்லூரிகளில் முறையாக சம்பளம் வழங்கும் போது இங்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முறையான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

கொரோனா காலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News