உள்ளூர் செய்திகள்
விலங்குகள், பறவைகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டில் மஞ்சள் பொடி தூவிய காட்சி.

கொரோனா பரவலை தடுக்க அமிர்தி பூங்காவில் மஞ்சள்பொடி தெளிப்பு

Published On 2022-01-08 14:48 IST   |   Update On 2022-01-08 14:48:00 IST
சுற்றுலா பயணிகள் அமிர்தி பூங்காவிற்கு வரும் முன்பு கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்ய பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்காவில் மான், மயில், புள்ளி மான், மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, முயல் என 17 வகையான விலங்குகள் பறவைகள் உள்ளது.

இந்த விலங்குகள், பறவைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு அனைத்து விலங்குகள் உள்ள அறைகளுக்கு உட்புறமாக மஞ்சள்தூள் தூவியும், பிளீச்சிங் பவுடர் தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வரும் முன்பு கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்ய பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைதி வனத்துறை ரேஞ்சர் முருகன் கூறுகையில்:-

கொரோனா பாதிப்பு வந்தது முதலே விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மஞ்சள்தூள், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளும் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

இன்று பூங்கா வழக்கம் போல செயல்பட்டது. நாளை ஊரடங்கையொட்டி பூங்கா மூடப்படுகிறது.

Similar News