உள்ளூர் செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி.

மாநகராட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

Published On 2022-01-06 14:15 IST   |   Update On 2022-01-06 14:15:00 IST
வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பள்ளிகொண்டா ஒடுகத்தூர் திருவலம் பென்னாத்தூர் பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குபதிவு எந்திரங்கள் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனது. இதில் மொத்த வாக்குச்சாவடிகள் 646-க்கு 20 சதவீத கூடுதல் ஒதுக்கீடு சேர்த்து 779 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவி 779 பயன்படுத்தப்பட உள்ளன.

இன்று வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன் படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கம்ப்யூட்டர் மூலம் முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

அனைத்துஅரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யும் மின்னனு வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Similar News