உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

173 சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2022-01-04 09:49 GMT   |   Update On 2022-01-04 09:49 GMT
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 173 சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்:

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண்களுக்கு திருமணம் நடப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, சமூகநலத்துறை மூலமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. இருப்பினும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மைனர் பெண்களுக்கு திருமணம் நடப்பது தொடர்கிறது.
 
இந்நிலையில், சமூக நலத்துறை மூலமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு மொத்தம் 173 மைனர் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்படி, சமூக நலத்துறையின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் 85, திருப்பத்தூர் 51, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 37 என மொத்தம் 173 மைனர் திருமணங்கள் நடப்பதற்கு முன்னதாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 21 மைனர் திருமணங்கள் நடந்த பிறகு, சம்பந்தப் பட்ட சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
பெற்றோர்கள் விழிப்புணர் வுடன் இருந்தால் மட்டுமே, பெண் பிள்ளைகளுக்கு, நடக்கும் மைனர் திருமணங்களை மாவட்டத்தில் முழுமையாக ஒழிக்க முடியும்“ என தெரிவித்தனர்.
Tags:    

Similar News