உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா பரவியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 50,606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,260 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,144 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 24 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் பரவலாக 4 மண்டலங்களிலும் கொரோனா பரவி வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம், லத்தேரி, அகரம் பகுதியிலும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது.இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மீண்டும் கொரோனா பரவிவருவதால் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கொரோனா பரவுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.