உள்ளூர் செய்திகள்
கொள்ளை முயற்சி

பல்லாவரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2022-01-04 14:54 IST   |   Update On 2022-01-04 14:54:00 IST
பல்லாவரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சாலையில் பிரபல தனியார் வங்கியான ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது.

நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் பணத்தை திருட முடியாததால்திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனிடையே இன்று காலை வங்கி ஏடிஎம்ல் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் ஒருவர் வந்து போது ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சி.சி.டிவி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Similar News