உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.3.44 கோடி மது விற்பனை

Published On 2022-01-01 15:25 IST   |   Update On 2022-01-01 15:25:00 IST
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.3.44 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.3 கோடியே 44 லட்சத்துக்கு மது பானங்கள் விற்பனை யாகியுள்ளது.

புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் கொண்டாட்டம் நடந்தது. வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் மது விற்பனை களைகட்டியது.

மது பிரியர்களின் வசதிக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. காலை முதலே விற்பனை அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் அனைத்துடாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது பானங்களை வாங்கி சென்றனர். மேலும் சிலர் சாலை ஓரங்களில் கும்பல் கும்பலாக நின்று மது அருந்தினர். அப்போது ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்று கோஷம் எழுப்பினர்.

வேலூரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் பலர் கடைகளுக்கு வந்து ஏமாந்து சென்றனர். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 108 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 

நேற்று ஒரே நாளில் ரூ.3.44 கோடிக்கு மது விற்பனையானது.
கடந்த ஆண்டைவிட மது விற்பனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர ஓட்டல்களில் உள்ள மது பார்களில் அதிகளவில் மது பானங்கள் விற்பனை யாகியுள்ளது.

Similar News