உள்ளூர் செய்திகள்
வேலூர் கிரீன் சர்க்கிள்

கனரக வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வர தடை

Published On 2022-01-01 15:12 IST   |   Update On 2022-01-01 15:12:00 IST
சென்னையிலிருந்து காட்பாடிக்கு வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நெரிசலை குறைக்க அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இந்த நிலையில் போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்தது.

வேலூர் பகுதியில் இருந்து காட்பாடி மற்றும் ஆந்திரா நோக்கிச் செல்லும் வாகனங்கள் பழைய பைபாஸ் சாலையில் அம்பிகா பெட்ரோல் பங்க் மற்றும் ராமஜெயம் பஸ் ஷெட் வழியாகச் சர்வீஸ் சாலையில் இணைந்து சேண்பாக்கம் தீரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வலதுபுறமாக திரும்பி சர்வீஸ் சாலை வழியாகச் சென்று புதிய பாலாறு பாலம் வழியாக காட்பாடி செல்ல வேண்டும். 

வேலூரில் இருந்து காட்பாடி செல்பவர்கள் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், வாலாஜாவில் இருந்து காட்பாடி செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை சில்க்ஸ் அருகே சர்வீஸ் சாலையில் இறங்காமல் நேராக கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தை கடந்து செல்வம் பெட்ரோல் பங்க் அருகில் சர்வீஸ் சாலையில் இறங்கி சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் வழியாகச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
கனரக வாகனங்கள்

இன்று முதல் கட்டமாக சென்னை வாலாஜா பகுதிகளில் இருந்து காட்பாடி வரும் கனரக வாகனங்கள் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. சென்னை சில்க்ஸ் அருகே போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு காட்பாடிக்கு வரும் கனரக வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் திருப்பிவிட்டனர். 

இந்த வாகனங்கள் நேரடியாக சென்று செல்வம் பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கி அங்கிருந்து சேண்பாக்கம் ரெயில்வே பாலம் வழியாக திரும்பி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் வழியாக காட்பாடி சென்றன.

சென்னை, அரக்கோணம், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து நேரடியாக காட்பாடிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதனால் கிரீன் சர்க்கிளில் கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி இல்லை.இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Similar News