உள்ளூர் செய்திகள்
மழை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் திடீரென கொட்டி தீர்த்த கன மழை

Published On 2021-12-31 16:03 IST   |   Update On 2021-12-31 16:03:00 IST
அரக்கோணம், வாலாஜா, காவேரிப்பாக்கம் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூர்:

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பிறகு மார்கழி மாதம் குளிர்வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் பகலிலேயே ஸ்வெட்டருடன் மக்கள் சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.

மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, காவேரிப்பாக்கம் பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர் காட்பாடி திருவலம் பகுதியில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

வேலூர் மாநகர பகுதியில் தொடர் மழை காரணமாக பாதாளச் சாக்கடை, கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. தெருக்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வேலூர் 22.2, காட்பாடி 14.1, பொன்னை 3.6, குடியாத்தம் 12, திருவலம் 30, வாலாஜா 30.5, அரக்கோணம் 47.8, ஆற்காடு 21.3, காவேரிபாக்கம் 40, அம்மூர் 42, சோளிங்கர் 6, கலவை 12.4.

Similar News