நிரந்தரமாக அரசு நகர பேருந்தை இயக்க கோரி கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு மனு கொடுத்தனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு நிரந்தர பஸ் இயக்ககோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
பதிவு: டிசம்பர் 30, 2021 15:47 IST
வெள்ளியங்காடு நால்ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
திருப்பூர்:
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் பல ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகளும் சென்று வருகின்றனர்.
ஆனால் மக்கள் சென்று வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு நிரந்தரமாக அரசு நகர பேருந்தை இயக்க கோரி கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு மனு கொடுத்தனர்.
ஆனால் மனு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமையில் வெள்ளியங்காடு நால் ரோட்டில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :