உள்ளூர் செய்திகள்
மனைவியிடம் தகராறு: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தக்கலை அருகே மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே கவியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது 36) கூலி தொழிலாளி. இவரது மனைவி அஜிதா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த பிள்ளைக்கு அஜிதாவின் உறவினர் ஒருவர் புதிய சைக்கிள் ஒன்றை நேற்று வாங்கி கொடுத்தார்.
இதை பார்த்த ஜெயசிங் வெளியே சென்று மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்பு நான் உயிரோடு இருக்க மாட்டேன். நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.
உடனே மனைவி அவரை மீட்டு சுவாமியார்மடத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற கொண்டு சேர்த்தார். பின்னர் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இது குறித்து தக்கலை போலீசில் மனைவி அஜிதா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். கிறிஸ்துமஸ் விழாவன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.