உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டில் இன்று 6-வது முறையாக நிலநடுக்கம்
பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எதற்காக நில அதிர்வு ஏற்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 3.15 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.5 ரிட்டர் அளவுகோலில் பதிவானது.
இதேபோல் நேற்று அதிகாலை 3.14 மணிக்கு அதிக சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளில் விரிசல் விழுந்தது. வீட்டில் அடிக்கி வைத்திருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. கட்டில் பீரோக்கள் நகர்ந்து சென்றன. மின்விசிறி தாறுமாறாக ஓடியது. பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு தெருவில் தஞ்சமடைந்தனர்.
இன்று காலை 9.40 மணிக்கு பேர்ணாம்பட்டு ரகமதாபாத், நியாமத் வீதி, வீராசாமி தெரு, இஸ்லாமிய தெரு, எல்.ஆர். நகர் தரைக்காடு, மளங்கு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. சத்தத்தை கேட்ட பொதுமக்கள் வீட்டிலிருந்து அலறியடித்துக் கொண்டு தெருவிற்கு வந்தனர்.
நில அதிர்வு காரணமாக பலரது வீட்டு சுவர்களில் விரிசல் விழுந்தன. பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் கலக்கமடைந்து அச்சத்தில் உள்ளனர்.
எனவே அதிகாரிகள் பேரணாம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எதற்காக நில அதிர்வு ஏற்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.