Published On 2021-12-23 16:07 IST | Update On 2021-12-24 09:17:00 IST
வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் இருந்து 50 கி.மீ மேற்கு வடமேற்கு பகுதியில் சில இடங்களில் இன்று பிற்பகல் 3.14 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நில அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும் பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.