உள்ளூர் செய்திகள்
கைது

குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபர் கைது

Published On 2021-12-16 14:46 IST   |   Update On 2021-12-16 14:46:00 IST
குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் பகுதியில் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரன், சரவணன், சக்கரவர்த்தி, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் இன்று காலையில் குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் நான்கு சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் மேலும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்தன இதனையடுத்து போலீசார் அந்த நாட்டு வெடிகுண்டுகளையும் அதற்கான மூலப் பொருட்களையும் பத்திரமாக கொண்டு வந்தனர்.

மேலும் அங்கிருந்து நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீ.கோட்டா அடுத்த ஏழுசுத்தி கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் நடராஜன் (வயது 35) என்பதும் அவருக்கு மாமியார் வீடு குடியாத்தம் அடுத்த பரவக்கல் அடுத்த கிடங்குராமாபுரம் என தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் வீடு எடுத்து தங்கி நடராஜன் கூலி வேலை செய்து வந்ததும் நிலங்களில் காவல் காக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அப்போது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீசார் நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News