உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு

Published On 2021-12-16 08:01 IST   |   Update On 2021-12-16 08:09:00 IST
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள்.

2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வழியுறுத்தி வந்தன. இந்த நிலையில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மொத்த தொகையில் 50 சதவீதமாகும்.

Similar News