உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தூய்மை பணியாளர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டுகோள்

Published On 2021-12-15 13:14 IST   |   Update On 2021-12-15 13:14:00 IST
தூய்மை பணி வாகனங்கள் பழுது பார்ப்பு பணியை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி அம்பேத்கர் தூய்மை பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் லயன்ஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் திருமலை தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணன் வரவேற்றார். 

ஏசுரத்தினம், ஸ்ரீதர், ஆனந்த் முன்னிலை வகித்தனர். மாநில தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தூய்மை பணி வாகனங்கள் பழுது பார்ப்பு பணியை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News