உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டிகளிடம் நகை பறிப்பு
பெரம்பலூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டிகளிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளம் கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாயகி (வயது 70) மற்றும் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா(65) ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அப்போது ரெங்க நாயகி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியையும், புஷ்பா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும், இது குறித்து தனித்தனியாக பாடாலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.