உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

ஆரணி அருகே 100 நாள் வேலை திட்ட பெண்கள் திடீர் மறியல்

Published On 2021-12-08 23:10 IST   |   Update On 2021-12-08 23:10:00 IST
ஆரணி அருகே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆரணி- செய்யார் சாலை எஸ்.வி.நகரம் கனிகிலுப்பை கூட்ரோடில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கனிகிலுப்பை கிராமத்தில் 100 நாள் பணியில் 4 பிரிவுகாளாக பிரித்து சுமார் 400 பெண்கள் 100 நாள் பணியில் வேலை செய்து வருகின்றனர்.

மேலும் 4 பிரிவுகளாக பெண்களை 100நாள் பணியில் வேலை செய்து வந்த நிலையில் தற்போது 100 நாள் பணியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கடந்த 2 மாதகாலமாக சரிவர பணி வழங்கவில்லை.

இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டற்கு சரிவர பதிலக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆரணி- செய்யார் சாலை எஸ்.வி.நகரம் கனிகிலுப்பை கூட்ரோடில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சாலையின் இருபக்கமும் போக்குவரத்து ஸ்தம்பித்தன. தகவலறிந்த வந்த ஆரணி பயிற்சி டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

Similar News