உள்ளூர் செய்திகள்
போராட்டம்

ஆரணியில் பட்டு சேலைகளுக்கு ஜி.எஸ்.டி. உயர்வை கண்டித்து நெசவாளர்கள் போராட்டம்

Published On 2021-12-08 17:40 IST   |   Update On 2021-12-08 17:40:00 IST
மத்திய அரசு பட்டு சேலைக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுக்கபட்டதால் பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியான சேவூர் முள்ளிபட்டு மூனுகபட்டு எஸ்.வி.நகரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பகுதிகளளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

மேலும் ஏற்கனவே கைத்தறி பட்டு சேலைக்கு மத்திய அரசு 5சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளன.

இதனால் பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்துடன் தொழிலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திடிரென மத்திய அரசு பட்டு சேலைக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு முடிவு எடுக்கபட்டதால் பட்டு சேலை நெசவாளர்கள் உற்பத்தியார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் ஆரணி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் ஆகியோர் பட்டு சேலை உற்பத்தியாளர் சங்க தலைவர் குருராஜராவ் தலைமையில் ஓன்றுணைந்து கவனஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏற்கனவே 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரியால் பட்டு சேலையின் விலை உயர்வு ஏற்பட்டு சிரமத்துள்ளாகி வருகின்றோம்.

தற்போது மீண்டும் 12 சதவீதம் ஜி.எஸ்.டி உயர்வு ஏற்பட்டால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நெசவாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழகளவில் பட்டு சேலை உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுபோவதாக பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பங்கேற்றனர்.

Similar News