உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை- சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் புகார்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் நாவிதர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். நாதஸ்வர வித்வான். இவரது மனைவி ரம்யா (வயது27). இவர்களுக்கு ராகுல், சஞ்சய் என 2 மகன்கள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.
சம்பவத்தன்று வெங்கடாச்சலம் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ராகுல் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கண் வழித்த ராகுல் தாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் உள்ளவர்கள் விரைந்து வந்து ரம்யாவை மீட்டு ரம்யாவின் அண்ணனான ரகுவிற்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ரகு இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.