செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜனதாவினர் மாட்டு வண்டி போராட்டம்

Published On 2021-11-26 08:33 GMT   |   Update On 2021-11-26 11:42 GMT
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், மழை வெள்ள பாதிப்புக்கு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க கோரியும் பா.ஜனதாவினர்தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் பா.ஜனதாவினர் நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



“தி.மு.க. அரசே, தமிழக அரசே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று”, “பெட்ரோல்- டீசல் விலையை குறைத்திடு”, “மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கிடு” என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ், கராத்தே தியாகராஜன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா உள்பட பல நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News