செய்திகள்
மணல்

மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

Published On 2021-11-24 20:22 GMT   |   Update On 2021-11-24 20:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் கும்மனூர் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த 3 லாரிகளில் சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல காவேரிப்பட்டணம் பகுதியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது கெட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த 2 லாரிகளை சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News