செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
கந்தர்வக்கோட்டையில் குளிக்க சென்ற இடத்தில் வாலிபர் இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, பெரிய கோட்டை ஊராட்சி, கொத்தகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது 30). திருமணமாகாத இவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம், திருப்பூரிலிருந்து கொத்தகபட்டிக்கு வந்தார். நண்பர்கள் மற்றும்உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினார்.
இந்நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கல்லுக்குளத்திற்கு சென்று, கரையில் துணிகளை வைத்துவிட்டு, குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் முடியாததால், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கிய சாமி தலைமையிலான வீரர்கள், குளத்தில் இறங்கி பாலசுப்பிரமணியத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால், நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில், கந்தர்வக்கோட்டை போலீசார், கிராம நிர்வாக அதிகாரி அன்பரசன், தாசில்தார் புவியரசன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் ஈடுபட்டு வருகின்றனர். குளிக்க சென்ற இடத்தில் வாலிபர் இறந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.