செய்திகள்
சாத்தூர் அருகே விபத்தில் முதியவர் பலி
சாத்தூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் தங்ககோபால் (வயது 47). இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களான ஆலமரத்துபட்டியை சேர்ந்த போத்திராஜ் (48), மேட்டமலையை சேர்ந்த காசி (65) ஆகியோருடன் எட்டூர் வட்டத்தில் இருந்து மேட்டமலைக்கு செல்லும் சாலையில் சென்றார். இந்த நிலையில் சாலையை கடப்பதற்காக சிவகாசி செல்லும் சாலையில் நின்று கொண்டு இருந்த போது, சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் காசி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.