செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 8,500 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-10-23 07:21 GMT   |   Update On 2021-10-23 07:21 GMT
பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக அணை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, தெங்குமரகடா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 813 கனஅடி தண்ணீர் வந்தது. இது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு 500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 5 ஆயிரத்து 700 கன அடி என மொத்தம் 8 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அணையின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News