செய்திகள்
நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு துறை செயலாளர் ஆய்வு

நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு துறை செயலாளர் ஆய்வு - விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

Published On 2021-10-16 12:01 GMT   |   Update On 2021-10-16 12:01 GMT
வாலாஜாபாத் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்யும் போது உள்ள குறைகள் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
வாலாஜாபாத்:

காஞ்சீபுரம் மாவட்ட தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு துறை செயலாளர் நசிமுதீன் ஆலோசனை நடத்தினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார்.

அப்போது, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்யும் போது உள்ள குறைகள் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தரமான அரிசியை உற்பத்தி செய்துதர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் வாலாஜாபாத் அருகே உள்ள நெய்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மா.ஆர்த்தி, கூட்டுறவுத்துறை அரசு துறை செயலாளர் நசிமுதீன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குனர் ராஜாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News