செய்திகள்
கிருஷ்ணகிரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் - கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (2-ம் தேதி), வருகிற 19-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி, நாளை (சனிக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாதுநபி ஆகிய இரண்டு நாட்களில் மதுபானம் விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, 19-ந் தேதி மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுகூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் அந்த 2 தினங்கள் மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.